Saturday, 30 November 2013

ஒரு பொதுக்கூட்டம்....பள்ளிவாசலில் தொழுகை ...





             ஒரு
பொதுக்கூட்டம்....பள்ளிவாசலில் தொழுகை
                                 ~~~~~~~~~~

   
  புதுச்சேரியில் (30-11-13) நேற்றிரவு
இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

      கூட்டம் நடந்த இடம், மாவீரன் திப்பு சுல்தான் வந்து சென்றதன் நினைவாக 'சுல்தான் பேட்டை' என்று அழக்கப்படும் ஊர்.
     மாலையில் துவங்கிய பொதுக்கூட்டம் இரவிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    
பேச்சாளர்கள் ஒவ்வொருவராகப் பேசிக்கொண்டிருந்த வேளையில் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே இருந்த பள்ளிவாசலில் தொழுகை ஆரம்பித்தது.


   
அப்போது மேடையில் ஒலிபெருக்கியின் முன் நின்று பேசிக்கொண்டிருந்தவர் ‘பள்ளிவாசலில் தொழுகை முடிந்தபின் பேச்சினைத் தொடர்வதாய்’ கூறி அங்கேயே நின்றார்.


  
பொதுக்கூட்ட மேடையிலும் எதிரே வீற்றிருந்த கூட்டத்திலும் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினரும், பகுத்தறிவாளர்களும் கூட இருந்தனர்.


 
  ஒரு சிறு சலசலப்பு கூட இல்லாமலும், எவரும் எழுந்து போகாமலும் காத்திருந்தனர். பேச்சாளர் ஒலிபெருக்கியின் முன் நின்று கொண்டேயிருந்தார்.


   
ஏறத்தாழ பதினைந்து நிமிடங்கள் கடந்தன.
பள்ளிவாசலில் தொழுகை முடிந்தபின் பொதுக்கூட்டம் தொடர்ந்தது.

   அவரவர் மதிக்கும் மதத்தை
எல்லோரும் மதிக்கும் பண்பினை வெளிப்
டுத்திய அந் நிமிடங்கள் அற்புதமான நிமிடங்கள்.

   
அந் நிமிடங்கள், ‘எனது இந்தியா’ என்கின்றப் பெருமை எனக்குள் மீண்டும் ஏற்படுத்திய நிமிடங்கள் !

No comments:

Post a Comment