உள்ளாட்சி எவ்வாறு இருக்க வேண்டும்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6-11-13ல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற உள்ளாட்சித் தலைவர்கள் மாநாட்டில் பேசிய திரு. ராகுல் காந்தி அவர்கள் -
‘‘மத்தியில் 2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி உள்ளது. இந் நாட்டு மக்களுக்கு உரிமைகளைக் கொடுப்பதிலே 2004லிலிருந்து அதன் கவனம் இருந்து வருகிறது . நாங்கள் உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றினோம். இந் நாட்டில் எவரும் பசியோடு இருக்க நாங்கள் விரும்பவில்லை . எங்களது திட்டங்களைப் பாருங்கள், அது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமாகவோ அல்லது உணவு பாதுகாப்பு மசோதாகவோ இருக்கட்டும், உண்மையில், பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் இல்லாது இத்திட்டங்களை செயல்படுத்தவே முடியாது. இத் திட்டங்கள் கிராமங்களில் இருந்து உருவாகி வளர்கின்றன. ஊராட்சித் தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்தினர் அரசினை ஆதரிக்க வேண்டும். சில முக்கிய முடிவுகள் குக் கிராமங்களில் எடுக்கப்படலாம், உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அவற்றை நாங்கள் செயல்படுத்த முடியாது. காஷ்மீரில் நிலவும் சூழ்நிலைகள் மாற வேண்டும் என்றால், நாம் ஊராட்சித் தலைவர்களுக்கு மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு, அதிகாரம் மற்றும் பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும்.
காஷ்மீரில் உள்ள ஒரு ஊராட்சித் தலைவர் அல்லது ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஊராட்சித் தலைவருக்கு, உள்ளாட்சி தலைவருக்கு அதிகாரம் ஏதும் உள்ளதா? உள்ளூர் தலைவர்கள் அதிகாரம் கொண்டவர்களாக ஆக வேண்டும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் அரசியலுக்குத் தேவையான ஒன்றாகும். பொதுவாக முக்கிய முடிவுகளை அரசாங்கம் மூடிய கதவுகளுக்குப் பின்னால் எடுக்கின்றது, ஆனால் நீங்கள் (ஊராட்சித் தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்தினர்) இல்லாமல் அவற்றை செயல்படுத்தவே முடியாது. நாங்கள் ஜம்மு காஷ்மீரை மாற்ற விரும்பினால் நாம் இரண்டு மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் . ஊராட்சித் தலைவர்கள்/உள்ளூர் தலைவர்கள் அதிகார பலம் பெற வேண்டும்; இளைஞர்களுக்கு உரிய அளவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்; முக்கியமாக நமக்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய ஜம்மு, காஷ்மீர பெண்கள் மேம்பட உதவ வேண்டும் . இன்று இங்கு பங்குபெற்றோரில் அதிக பெண்களைப் என்னால் பார்க்க முடியவில்லை . காங்கிரஸ் கட்சியின் கவனமும் இதுகுறித்தே உள்ளது . நாங்கள் எங்களது ஹிமயத் மற்றும் உமீத் திட்டங்களின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.
உங்களால் செய்யக்கூடிய ஒரு செயலை எந்தவொரு எம்.எல்.ஏ. அல்லது மந்திரியால் செய்யமுடியாது. உள்ளூர் வேலைகள் உங்களால் செய்யப்பட வேண்டும் – அது உங்களுக்கே உரிய கடமை. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களின் கடமை வேறு. அவர்கள் சட்டங்களை இயற்றுபவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் பிரச்சினைகளில் முடிவுகளை எடுக்கவும் அதை செயல்படுத்தவும் வேண்டியது உங்கள் பொறுப்பு . ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற அரசாங்கம் உள்ளது, நாங்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடுவோம். நாங்கள் இங்கே 73, 74 வது திருத்தங்களை அமுல்படுத்தவுள்ளோம். உங்களது உரிமைகள் உங்களுக்குக் கிடைக்கும், நான் உங்களுக்காகப் போராடுவேன். உங்கள் உரிமைகள் உங்களுக்குக் கிடைக்கும் வரை நான் இங்கே மீண்டும் மீண்டும் வந்துகோண்டே இருப்பேன்.
இங்கே தஞ்சம்பகுந்தவர்களின் பிரச்சினைகளைக் குறித்து நான் அறிவேன். அவர்களின் கஷ்டங்களை நான் புரிந்துகொண்டுள்ளேன். சாத்தியமான அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு காங்கிரஸ் செய்யும் என நான் உறுதியளிக்கின்றேன். மேலும், அவர்களின் உரிமைகளுக்காகவும் நாங்கள் போராடுவோம்.
அம்பிகா சோனி அவர்கள் இங்கு எல்லை பிரச்சினை குறித்துப் பேசினார். உங்களுடைய போராட்டத்தில் உங்களோடு நாங்கள் நிற்போம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அவற்றை நாங்கள் செய்வோம். நீங்கள் அதிகாரம் பெற்றவர்களாக வேண்டும். உங்களின் உரிமைகள் உங்களுக்கு கிடைக்க உறுதிசெய்வோம். உணவு பாதுகாப்பு மசோதா பற்றி (ஜம்மு காஷ்மீர்)முதல்வரோடு பேசிவிட்டேன், புதிய சட்டத்தின் கீழ் குறைவான உணவு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற கவலையை அவர் கொண்டுள்ளார். கேரளா போன்ற மாநிலங்களில் இதே பிரச்சினை இருந்தது, மத்திய அரசு அந்த பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுத்தது . ஜம்மு காஷ்மீருக்கும் நாங்கள் அப்படியே செய்வோம். உணவு பாதுகாப்பு சட்டம் இங்கே செயல்படுத்தப்பட வேண்டும், மேலும், பற்றாக்குறையை ஈடு செய்வோம் . மற்ற மாநிலங்களுக்கு நாங்கள் என்ன செய்கின்றோமோ, அவற்றை ஜம்மு காஷ்மீருக்கும் செய்வோம். பிற மாநிலங்களைப் போன்றே உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்தல் மசோதா மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் ஜம்மு காஷ்மீரிலும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
கேரளாவைப் பாருங்கள் அங்குள்ள ஊராட்சித் தலைவர்கள் அதிகாரம் கொண்டவர்களாய் உள்ளனர். . உள்ளாட்சி கூட்டங்கள், மாவட்டக் கூட்டங்கள் நடைபெறுகின்றன, மேலும் மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றது. அதில்தான் அரசியலின் எதிர்காலம் உள்ளது. அது போன்றே ஜம்மு காஷ்மீரிலும் நடைபெற வேண்டும். உள்ளாட்சியைப் பொறுத்தவரை கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நடைபெறுவதைத்தான் நாமும் பின்பற்ற வேண்டும். இது காஷ்மீரிலும் நடக்கும்படி நான் பார்ப்பேன். அது நடக்கும் வரை மீண்டும் மீண்டும் இங்கு நான் வந்துகொண்டே இருப்பேன். நீங்கள் அதை அடையும் வரை உங்களுக்காக நான் போராடுவேன். ஒதுக்கீடு, பெண்கள் உரிமைகள் ஆகிய பிரச்சினைகளைக் காங்கிரஸ் தீர்க்கும், மேலும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் காங்கிரஸ் பாடுபடும்’’ என்றார்.
"Since 2004, there is UPA Government in Delhi and our focus since 2004 has been on giving rights to people of this country. We passed the food security bill. We didn't want anyone to be hungry in this country. Look at our programs, MNREGA or Food security bill, the truth is that without Panchayati Raj and Sarpanches, these programs can't function.
These programs develop from villages. Sarpanches and Panchayats will have to support the government. Some critical decisions will be taken in small villages, and we can't do it without your cooperation. If the situations need to change in J&K, we need to give power and responsibilities to our Sarpanches and local bodies.
What power a sarpanch or panch posses in
J&K? Does a sarpanch, local body leader in Jammu and Kashmir have any
powers? In 21st century politics, the local leaders need to be empowered.
Normally the major decisions are being taken by the government behind closed
doors, but without you those cannot be implemented. If we want to change
J&K we should focus on two-three factors. The local leaders need to be
empowered; youth need to be given proper skill development training and
employment; and finally the women in J&K, who are our backbone, have to be
helped. I can't see many women here today. This has been the focus of the
Congress party too. We are providing training to thousands of youth under our
schemes Himayat and Umeed.
What you can do, no MLA or minister can do. The local work needs to be done by you - that is your role. The roles of MLAs and ministers are different. They are lawmakers. But it is your responsibility to take decisions on local issues and to implement it. We have a government supported by us and we will fight for the rights of the people. We will implement 73rd, 74th Amendment here. You will get your rights, I will fight for you. I will keep coming here till you get your rights.I am also aware of the issues of the refuges here. I understand their difficulties. I want to assure them that the Congress party will extend all possible help for them and will fight for their rights too.
Ambika Soni ji had just spoken about the border issues. We will stand by you in your fight. We will do whatever possible for the people of Jammu and Kashmir. We want to empower you. We want to ensure that you get your rights.I have just spoken to the Chief Minister about Food Security Bill and he was concerned that a little less food will be allocated under the new law. The states like Kerala also had the same issue and the Centre took adequate remedial measures to solve those problems. We will do the same in Jammu and Kashmir too. We want the law implemented here as well and we will make up the deficit. Whatever we are doing in the rest of the states, we want to do that in J&K. Food security Bill, land acquisition bill and Panchayati raj need to be implemented in J&K also like in any other state.
Look at Kerala where the Sarpanchs are empowered. There are local body meetings, district body meetings and people’s opinions are heard. That is the political future and that is what should happen in J&K. We should follow what states like Kerala & Tamil Nadu are doing in terms of local governance. I will make sure that this happens in J&K too and I will fight for you to achieve it and until it happens I will keep coming back. The Congress will resolve issues of reservation, women's rights and empower the people of J&K."
-Congress Vice-President Shri. Rahul Gandhi in Panchayat leaders meet at Jammu.
No comments:
Post a Comment