Wednesday 26 March 2014

இலங்கை நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியும் ஆனது எப்போது? எப்படி?


இலங்கை நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியும் ஆனது எப்போது? எப்படி?
&&&&&&&&&&&

     அன்மையில், ஃபேஸ்புக்கில் இலங்கை நண்பர் ஒருவர், அந்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவந்தது ராஜிவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம்தான் என்பதை முற்றிலும் மறுத்து ‘பிதற்றல்’ ‘புதிய கிளரல்’ என்றெல்லாம் கடுமையாக சாடியிருந்ததால்    உண்மை என்ன என்பதை எடுத்துச் சொல்லவேண்டியது கட்டாயமாயிற்று.

   இலங்கை நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவந்தது ராஜிவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம்தான் என்பதே முற்றிலும் உண்மை.
   பிதற்றல் அல்ல, தமது சொந்த நாட்டின் வரலாற்றை கவனத்தில் கொள்ளாதோருக்கு கிளரிக் காட்டப்படும் உண்மை.

   இலங்கையின், 1956 ஆண்டின் அலுவலக மொழி சட்ட வரைவு    (Official Languages Bill of 1956) ன்படி சிங்களம் மட்டுமே தேசிய அலுவலக மொழியாக ஆக்கப்படவிருந்ததை, தமிழ் மக்கள் எதிர்க்க, மறியாதைக்குரிய S.J.V.  செல்வநாயகம் அவர்கள் 20-8-1957லிருந்து சத்யாகிரகம் செய்யப்போவதாக அறிவிக்க, 25-7-1957ல் S.W.R.D. பண்டாரநாயக- செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்பட அதன்படி தமிழ் மொழி இலங்கையின் சிறுபான்மையின மொழியாக அங்கீகரிக்கப்பட்டு வடக்கு & கிழக்கு மாகாணங்களின்…..நன்கு கவனிக்க….வடக்கு & கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அலுவலக (இலங்கைத் தமிழ் உச்சரிப்பில் சொல்வதானால் கரும) மொழியாக ஆக்க வகை செய்வதாயிருந்தது.

   அதைக் கடுமையாக எதிர்த்து
J.R. ஜெயவர்தனே அவர்கள் (கவனிக்க J.R. ஜெயவர்தனே) கொழும்பிலிருந்து கண்டிக்கு கண்டன ஊர்வலம் நடத்தினார்.

    சிங்களரது எதிர்ப்பால் பண்டாரநாயக- செல்வநாயகம் ஒப்பந்தம் கைவிடப்பட்டு வடக்கு & கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமேயான மொழியாயிற்று.

     பின்னர், 1970ல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயகவால் ஏற்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டம் ‘’சிங்கள மொழி மட்டும்’’ என்பதை இலங்கையில் அமலாக்கம் செய்ய…........உதயமானது "
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி" (Tamil United Liberation Front ). அதனைத் தொடர்ந்து ஏற்பட்டதுதான் "தமிழீழ விடுதலைப் புலிகள்" (The Liberation Tigers of Tamil Eelam) அமைப்பாகும்.

    சொல்லப்போனால், இலங்கையின் இன்றய நிலைக்குக் காரணமே இலங்கை ஆட்சியாளர்களின் ’சிங்கள மொழி மட்டும்’’ என்ற தவறான கொள்கைதான்.

    இதற்கு விடிவு காலமாக வந்ததே வடக்கு & கிழக்கு மாகாணங்கள் மட்டுமல்லாது இலங்கை முழுவதும் தமிழும் ஆட்சி மொழி என்கின்ற ராஜிவ்- ஜெயவர்தனே ஒப்பந்தம்.

(காண்க – 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம்-இரண்டாவது ஷரத்தின் பதினெட்டாவது உட்பிரிவு clause 2.18 of the Indo Srilanakan accord 1987.)

   எனவே, இலங்கை நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவந்தது ராஜிவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம்தான் என்பதும் அது இந்தியாவின் முயற்சியால்தான் என்பதும் பிதற்றல் அல்ல நண்பர்களே தமது சொந்த நாட்டின் வரலாற்றை கவனத்தில் கொள்ளாதவருக்கு கிளரிக் காட்டப்படும் உண்மை.

    இலங்கை நாட்டவருக்கே அதன் வரலாற்றைக் கூறும் வாய்ப்பினை எமக்கு அளித்த நண்பருக்கு பாரிய நன்றி!

                                                                                        @@@@@@@@@@@